தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 12, 2026 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 07:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:இந்திய வங்கிகள் சங்கத்தால் (ஐ.பீ.ஏ.,) ஒப்பு கொள்ளப்பட்ட வாரத்துக்கு, ஐந்து நாள் வேலை என்பதை மத்திய அரசு தாமதம் இன்றி உடன் அமலாக்க வேண்டும். வங்கிகளில் அனைத்து ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பாகுபாடு இன்றி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலாக்க வேண்டும். ஓய்வூதியத்தில் மேம்பாடு வேண்டும்.

ஒப்பு கொண்ட கோரிக்கைகளை உடன் அமலாக்க வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தலைமையில், ஈரோடு, சூரம்பட்டிவலசில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட அளவில், 400க்கும் மேற்பட்ட கிளைகளை சேர்ந்த, 2,800 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். நிர்வாகிகள் நரசிம்மன், அல்டாப்ஹூசைன், சியாம் சுந்தர், வேலுசாமி, ஆனந்தகுமார், நந்தகுமார், முகுந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us