காலை உணவு திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
காலை உணவு திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : செப் 12, 2026 07:30 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும்
உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவன முதன்மை செயலருமான வெங்கடேஷ்,
ஈரோடு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தங்க மோதிரம்
திட்டத்துக்கான பாதுகாப்பு அறையை ஆய்வு செய்தார்.
பின் ஈரோடு
குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்ட
முன்னேற்பாடு பணிகளை கேட்டறிந்தார். மாவட்டத்தில் மொத்தம், 400 அரசு
பள்ளி, 25 அரசு உதவி பெறும் பள்ளிகளில், 20,731 கிராமப்புற
மாணவர்கள், 8,426 நகர்ப்புற மாணவர்கள் என, 29,157 பேர் பயன் பெற
உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை உறுதி செய்தார்.
