ADDED : செப் 28, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர்கள், கருப்பு உடை அணிந்து நேற்று பணியில் ஈடுபட்டனர்.
வாரத்தில்
5 நாட்கள் வங்கிப்பணி என்பதை மத்திய அரசு உடனடியாக
நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்கில்
ஈடுபடுகின்றனர்.
இதனால், 27ல் அனைத்து வங்கி ஊழியர்களும் பணி செய்ய
மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் தேசிய,
சில தனியார் வங்கிகள் நேற்று செயல்பட்டன. ஊழியர்கள், அதிகாரிகள்
கருப்பு உடை அணிந்து பணி செய்தனர். கோரிக்கையை வலியுறுத்தி இன்று
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
