பால்வளத்துறை அதிகாரிகள் மீது பால் உற்பத்தியாளர் குற்றச்சாட்டு
பால்வளத்துறை அதிகாரிகள் மீது பால் உற்பத்தியாளர் குற்றச்சாட்டு
ADDED : செப் 28, 2026 06:05 AM

அ நிறம் | அளவு
பவானி:ஈரோடு
மாவட்ட தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பொது பேரவை
கூட்டம், சித்தோட்டில் நேற்று நடந்தது. சங்க மாநிலத் தலைவர்
ராஜேந்திரன் உட்பட மாவட்டத்தை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட
நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் குறித்து மாநில தலைவர்
ராஜேந்திரன் கூறியதாவது:
ஆவின் நிறுவனத்துக்கு அடித்தளமாக,
ஆணிவேராக விளங்கும், கிராம சங்க பணியாளர்களை அலட்சியமாக
நடத்துவதோடு, அவமரியாதையாக பேசுவதை, பால்வளத்துறை துணை
பதிவாளர் மற்றும் ஆவின் பொது மேலாளர் நிறுத்த வேண்டும். சுயமரியாதையை
உலக அளவில் கொண்டு சென்ற ஈரோட்டு மண்ணில், ஆவின் பணியாளருக்கு
சுயமரியாதை வழங்கப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் துணை
பதிவாளருக்கு எதிராக பால் உற்பத்தியாளர்கள் ஒன்று திரட்டி
போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு கூறினார்.
