/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு பேனர்கள் அகற்றம்
/
ஈரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு பேனர்கள் அகற்றம்
ஈரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு பேனர்கள் அகற்றம்
ஈரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு பேனர்கள் அகற்றம்
ADDED : நவ 06, 2025 01:08 AM
ஈரோடு, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, ஆர்.கே.வி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி கடைகள், நகை கடைகள் உள்பட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு விளம்பர பிளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்தன. தீபாவளி முடிந்த போதும், விளம்பர பேனர்கள் அகற்றப்படாமல் இருந்தது.
இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் அர்பித்ஜெயின் உத்தரவிட்டார். அதன்படி முதற்கட்டமாக, மணிக்கூண்டு, நேதாஜி ரோடு, சத்தி ரோடு, பார்க் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், இடையூறாக இருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். அகற்றப்பட்ட பேனர்கள் குடோனுக்கு கொண்டு செல்லப்படும் என்றும், மீண்டும் தேவைப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் அணுகி, அபராதத் தொகை செலுத்திவிட்டு பேனர்களை பெற்றுக் கொள்ளலாம் என
அதிகாரிகள் தெரிவித்தனர்.

