ADDED : ஆக 24, 2024 07:21 AM
பவானி: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் வண்டல் மண் மற்றும் களிமண் அள்ளிக்கொள்ள, விவசாயிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இவ்வகையில் வெள்ளித்திருப்பூர் அருகே கெட்டிசமுத்திரம் ஏரியில், 50க்கும் மேற்பட்ட விவசா-யிகள், கடந்த, 19, 20 என இரண்டு தினங்களாக மண் அள்ளி சென்றனர். நிர்ணயிக்கப்பட்ட, 1,300 யூனிட் மண் அள்ளப்பட்-டதால், மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேசமயம் வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலம் ஏரியில், 14 ஆயிரம் யூனிட் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்-டுள்ளது.
இந்நிலையில் எண்ணமங்கலம் ஏரியிலும் மண் அள்ள அனுமதி பெற்றுள்ள, கெட்டிசமுத்திரம் ஏரி சுற்று வட்டார விவசாயிகள், எண்ணமங்கலம் ஏரிக்கு டிராக்டருடன் நேற்று சென்றனர். அப்ப-குதி விவசாயிகளும், அரசியல் கட்சியினரும், கெட்டிசமுத்திரம் ஏரியில் மண் அள்ளியவர்கள், இங்கு மண் அள்ள வரக்கூடாது எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர். இதனால் திரும்பிய விவசா-யிகள், 50க்கும் மேற்பட்டோர், கெட்டிசமுத்திரம் ஏரியை ஒட்டிய சுமைதாங்கியில் திரண்டனர். சுமைதாங்கி பாலத்தின் ரோட்டில், நேற்று மாலை, 5:30 மணிக்கு, டிராக்டரை குறுக்கே நிறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தியூர் மற்றும் வெள்ளித்தி-ருப்பூர் போலீசார், அந்தியூர் தாசில்தார் முன்னிலையில் பேச்சு-வார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்றதால், 20 நிமிடங்களில் மறியல் கைவிடப்பட்டது.
இதை தொடர்ந்து அந்தியூர் தாலுகா அலுவலகத்தில், தாதில்தார் கவியரசு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் கெட்டிசமுத்திரம் ஏரியில் மண் அள்ள அனுமதியளித்த பிறகு, எண்ணமங்கலம் ஏரியிலும் மண் அள்ள அனுமதி வழங்-கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் எண்ணமங்கலம் ஏரியில் மண் அள்ள, விவசாயிகளுக்கு தற்காலிக-மாக தடை விதிக்கப்பட்டுள்ளது.