/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பலா விளைச்சல் அமோகம் பர்கூர் விவசாயிகள் மகிழ்ச்சி
/
பலா விளைச்சல் அமோகம் பர்கூர் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 30, 2025 01:39 AM
அந்தியூர்: அந்தியூரை அடுத்த பர்கூர்மலையில் குளிர்ந்த சீதோஷன நிலை நிலவுவதால், இயற்கையாகவும், ஒரு சில கிராமங்களில் பலா மரங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
தற்போது தாமரைக்கரை, தட்டக்கரை, மணியாச்சி, தேவர்மலை உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் நடவு செய்த மரங்களில் பலா பழங்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குகி-றது. கடந்தாண்டை விட, இந்தாண்டு அதிக மழை பெய்ததால், நல்ல விளைச்சல் அடைந்து, மரத்தின் வேர் முதல் நுனி வரை கொத்து கொத்தாய் காய் பிடித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பலாப்பழம், ஈரோடு, அந்தியூர், சத்தியமங்கலம் மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்துக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
சிறிய ரக பழங்கள், 50 ரூபாய், பெரிய ரகங்கள், 300 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் லாபம் கூடுதலா கிடைக்கும் என தெரிவித்தனர்.

