/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நெல் கொள்முதல் நிலையங்கள் 45 இடங்களில் திறக்க அனுமதி
/
நெல் கொள்முதல் நிலையங்கள் 45 இடங்களில் திறக்க அனுமதி
நெல் கொள்முதல் நிலையங்கள் 45 இடங்களில் திறக்க அனுமதி
நெல் கொள்முதல் நிலையங்கள் 45 இடங்களில் திறக்க அனுமதி
ADDED : டிச 30, 2025 01:39 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவத்தில், கீழ்பவானி மற்றும் மேட்டூர் வலது கரை பாசன பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய, 45 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இன்று நசியனுார், காஞ்சிகோவில், பெத்தாம்-பாளையம்-2, நல்லாம்பட்டி, காசிப்பாளையம்-1, 2, கலிங்கியம், புதுவள்ளியம்பாளையம்-2, நாதிப்பாளையம், கூகலுார் என, 10 இடங்களில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட உள்ளது.
இரண்டாம் கட்டமாக ஜன., 6 முதல், 27 இடங்கள்; மூன்றாம் கட்டமாக ஜன., 20ல், எட்டு இடங்களில் கூடுதல் நிலையங்கள் திறக்கப்படும். நெல் கிரேடு 'ஏ' குறைந்த பட்ச ஆதாரவிலை, 2,389 ரூபாய், ஊக்கத்தொகை, 156 ரூபாய் என குவிண்டால், 2,545 ரூபாய்க்கும், பொது ரகம், குறைந்த பட்ச ஆதர விலை, 2,369 ரூபாய், ஊக்கத்தொகை, 131 ரூபாய் என குவிண்டால், 2,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்.

