/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பூத்களில் அடிப்படை, இணைய தள வசதி : 15க்குள் ஏற்படுத்தப்படும்; கலெக்டர் தகவல்
/
பூத்களில் அடிப்படை, இணைய தள வசதி : 15க்குள் ஏற்படுத்தப்படும்; கலெக்டர் தகவல்
பூத்களில் அடிப்படை, இணைய தள வசதி : 15க்குள் ஏற்படுத்தப்படும்; கலெக்டர் தகவல்
பூத்களில் அடிப்படை, இணைய தள வசதி : 15க்குள் ஏற்படுத்தப்படும்; கலெக்டர் தகவல்
ADDED : ஏப் 08, 2024 07:25 AM
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதி கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதை பார்வையிட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நிருபர்களிடம் பேசியதாவது:
மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணியில், 10,413 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு நேற்று சட்டசபை தொகுதி வாரியாக, 2ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. தேர்தல் பணியில் ஈடுபடும், 10,413 பேரில், 6,992 பேருக்கு தேர்தல் பணி சான்றிதழ் வழங்கப்படும்.
இதன் மூலம், அவர்கள் பணியாற்றும் ஓட்டுச்சாவடியிலேயே தேர்தல் அன்று தங்களது ஓட்டை பதிவு செய்து கொள்ளலாம். மீதி, 3,663 பேருக்கு தபால் ஓட்டுப்பதிவு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் மூலம், 55 புகார், சீ-விஜில் செயலி மூலம், 34 புகார் என, 89 புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் குறைந்தபட்ச வசதிகளான சாய்வு தளம், குடிநீர் மின்சாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளான, திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பர்கூர், நீலகிரி மாவட்ட லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் பகுதியி ஓட்டுச்சாவடிகளில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இணைய தள வசதிகள் வரும், 15க்குள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.

