/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாசிலா அருவி, நம்மருவியில் குளிக்க அனுமதி: 'ஆகாய கங்கைக்கு' தடை
/
மாசிலா அருவி, நம்மருவியில் குளிக்க அனுமதி: 'ஆகாய கங்கைக்கு' தடை
மாசிலா அருவி, நம்மருவியில் குளிக்க அனுமதி: 'ஆகாய கங்கைக்கு' தடை
மாசிலா அருவி, நம்மருவியில் குளிக்க அனுமதி: 'ஆகாய கங்கைக்கு' தடை
ADDED : டிச 07, 2024 06:49 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலையில், மழை குறைந்ததால், மாசிலா அருவி, நம்மரு-வியில் சுற்றுலா பயணிகள் குளிக்க, இன்று முதல்
அனுமதி வழங்-கப்பட்டுள்ளது.'பெஞ்சல்' புயலால், கொல்லிமலையில் பெய்த கனமழையால், இங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி,
நம்மரு-வியில், சிகப்பு நிறத்தில் காட்டாற்று வெள்ளம் கொட்டியது. சுற்-றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த, 1
முதல், 3 வரை அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.இந்நிலையில், கொல்லிமலையில், கடந்த, 2 நாளாக மழை இல்-லாததால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.
இதனால், இன்று முதல் மாசிலா அருவி, நம்மருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு குறையா-ததால், 8 வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
விதித்து, வனத்-துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.