ADDED : செப் 28, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,:ஈரோடு தினசரி மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு
மார்க்கெட்டிற்கு தினமும், 2 டன் வரை பீன்ஸ் வரத்தாகும். நேற்று ஒரு
டன்னாக வரத்து குறைந்ததால், கடந்த வாரம் கிலோ, 88 ரூபாய்க்கு விற்ற
பீன்ஸ், 120 ரூபாயாக விலை உயர்ந்தது.
மார்க்கெட்டில் பிற காய்கறி விலை
விபரம் (கிலோ-ரூபாயில்): சின்ன வெங்காயம்-100, பெரிய வெங்காயம்-75,
இஞ்சி-60, முருங்கைக்காய்-80, பச்சை மிளகாய்-80, கருப்பு அவரை-90, பெல்ட்
அவரை-80, கேரட்-60, பீட்ரூட்-70, கருணை கிழங்கு-80, பாவற்காய்-60, வெள்ளை
பூசணி-25 ரூபாய்க்கு விற்றது.
