/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெங்களூரு - க.குமரி ரயில் போத்தனுாரில் நிற்கும்
/
பெங்களூரு - க.குமரி ரயில் போத்தனுாரில் நிற்கும்
ADDED : நவ 06, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சமஸ்கிருத பாரதி அகில இந்திய கருத்தரங்கு நடப்பதை முன்னிட்டு, கே.எஸ்.ஆர்., பெங்களூரு - கன்னியாகுமரி தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் வரும், 8ல், தற்காலிகமாக போத்தனுாரில் நின்று செல்லும்.
அதாவது, 7ல் பெங்களூருவில் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 3:13க்கு போத்தனுார் சந்திப்பில், 2 நிமிடம் நின்று செல்லும். மறுமார்க்க ரயில், 9ல் கன்னியாகுமரியில் புறப்பட்டு, அன்று இரவு, 10:05 மணிக்கு போத்தனுாரில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

