ADDED : செப் 05, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
சூரம்பட்டி அணைகட்டுரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சங்கர்.
இவரது வீட்டு படுக்கை அறையில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு வினோத சத்தம்
கேட்டது.
அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது, 3 அடி நீள கண்ணாடி
விரியன் பாம்பு இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் பதறியடித்து ஓட்டம்
பிடித்தனர். ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு
நிலைய வீரர்கள், 20 நிமிடம் போராடி பாம்பை பிடித்து வனத்துறையில்
ஒப்படைத்தனர்.
* ஈரோடு பழைய பாளையம் இந்து நகரை சேர்ந்தவர் பிரதீப். இவரது வீட்டு
கூரையில்
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, 4 அடி நீள சாரை பாம்பு இருந்தது
தெரியவந்தது. தீயணைப்பு நிலைய வீரர்கள், 15 நிமிடம் போராடி பாம்பை
பிடித்தனர்.
