ADDED : செப் 05, 2026 06:04 AM

அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:கர்நாடக
மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு தேங்காய் ஏற்றிய பிக்-அப்
வேன், திம்பம் மலைப்பாதை வழியாக வந்தது.
தாளவாடி
அருகேயுள்ள ஜீரஹள்ளியை சேர்ந்த சிவகுமார், 24, ஓட்டினார். அவருடன்
கெட்டவாடியை சேர்ந்த மாதவசாமி, 20; சாம்ராஜ் நகரை சேர்ந்த பிரிஜ்வால்,
20, வந்தனர். திம்பம் மலைப்பாதை, 20 வது கொண்டை ஊசி வளைவில்
கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்தில் மோதியது. இதில் பிரிஜ்வால்
சம்பவ இடத்தில் பலியானார். மாதவசாமி படுகாயம் அடைந்தார். பிற வாகன
ஓட்டிகள் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆசனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
