ADDED : செப் 12, 2026 07:35 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:பாரதியார்
நினைவு தினமான நேற்று, ஈரோடு கருங்கல்பாளையம் பாரதியார்
நுாலகத்தில் உள்ள அவரது சிலைக்கு, மாவட்ட நுாலகர் ராஜேந்திரன்
தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
த.மா.கா., சார்பில்
மாநில துணை தலைவர் விடியல்சேகர் தலைமையில், மாநகராட்சி தி.மு.க.,
கவுன்சிலர் ரமேஷ்குமார், வாசகர் வட்ட தலைவர் சந்திரசேகர், வாசகர் வட்ட
துணை தலைவர் மின்மிணி, பள்ளி குழந்தைகள் என மலர் துாவி அஞ்சலி
செலுத்தினர். ஏற்பாடுகளை நுாலகர்கள் கலைச்செல்வி, தங்கம்
செய்திருந்தனர்.
