/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இலக்கிய திறனறி தேர்வில் பாரதி பள்ளி சாதனை
/
இலக்கிய திறனறி தேர்வில் பாரதி பள்ளி சாதனை
ADDED : டிச 24, 2024 07:53 AM
பெருந்துறை: பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்-நிலை பள்ளியின், பிளஸ் ௧ வகுப்பு மாணவ, மாணவியர், 15 பேர், தமிழக அரசு சார்பில் நடந்த, நடப்பாண்டு தமிழ் இலக்கிய திறனறித்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பூபதி, தர்ஷினி, லித்தீஷ், சுபரஞ்சனி, ேஸானாலிஹா, ரித்திகா, தனுஸியா, கனிஷ்கா, காவ்யா, கவுதம், வின்யா, மகதி, தர்ஷினி, மெகிதா, தர்ஷ்னா ஆகியோர் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும், ௨,௦௦௦ ரூபாயை ஊக்கத்-தொகையாக தமிழக அரசு வழங்கும். மாவட்டத்தில் இப்பள்-ளியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வில் வெற்ற்று பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், பயிற்சி அளித்த தமிழ் ஆசி-ரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் குணசேகரன் ஆகியோரோ, பள்ளி தாளாளர் மோகனாம்பாள் மற்றும் தலைவர் செந்தில்குமார் பாராட்டினர்.