/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி பெண்ணிடம் ரூ.58 லட்சம் மோசடி
/
பவானி பெண்ணிடம் ரூ.58 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 08, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பவானியை சேர்ந்த, 51 வயது பெண்ணுக்கு, டெலிகிராமில் அறிமுகமான ஒரு ஆசாமி, ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்தால், இரட்டிப்பு லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பி, ஆசாமி சொன்ன வங்கி கணக்குக்கு, மூன்று மாதத்தில், 58 லட்சம் ரூபாய் வரை அனுப்பி உள்ளார். ஆனால், அப்பெண் செய்த வேலைக்கு பணம் தராமல், அவரிடம் பெற்ற முன் பணத்தையும் தரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், ஈரோடு சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.
A