ADDED : டிச 24, 2025 08:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில், மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று நீர்வரத்து, 257 கன அடியாக இருந்தது. நீர்மட்டம், 98.87 அடி, நீர் இருப்பு, 27.8 டி.எம்.சி.,யாக இருந்தது.
கீழ்பவானி பாசனத்துக்கு, 1,700 கன அடி தண்ணீர்; அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 550 கன அடி; குடிநீர் தேவைக்கு, 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால், அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

