/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணை நீர்மட்டம் 97 அடியாக உயர்வு
/
பவானிசாகர் அணை நீர்மட்டம் 97 அடியாக உயர்வு
ADDED : ஆக 22, 2024 03:42 AM
புன்செய் புளியம்பட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம், 97 அடியாக உயர்ந்தது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி., கொள்ளளவும் கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதியான, நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையே அணையின் நீர் வரத்துக்கு பிரதானம். நீர்ப்பிடிப்பு பகுதியான, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மாவட்ட மலைப்பகுதி மற்றும் வட கேரளா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 1,426 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 6,714 கன அடியாக அதிகரித்தது.
நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டம், 97.33 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு, 26.6 டி.எம்.சி.,யாக உள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு, 700 கனஅடி, குடிநீருக்கு, 100 கன அடி என மொத்தம், 800 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பாசன பகுதி விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.