/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்மழை 91 அடியை எட்டிய பவானிசாகர் நீர்மட்டம்

ADDED : அக் 27, 2024 01:07 AM
பவானிசாகர், அக். 27-
நீர்வரத்து அதிகரிப்பால், பவானிசாகர் அணை நீர்மட்டம், 91 அடியை எட்டியது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணைக்கு, நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையே பிரதான நீர்வரத்தாகும். அணை மூலம், 2.௪௭ லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக அணை நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது.
இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், 3,429 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 7,463 கனஅடியாக நேற்று காலை அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம், 91 அடியை எட்டியது. நீர் இருப்பு, 22.3 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையில் இருந்து அரக்கன் கோட்டை -தடப்பள்ளி பாசனத்துக்கு, 150 கன அடி தண்ணீர்; கீழ்பவானி வாய்க்காலில் ,700 கனஅடி தண்ணீர் மற்றும் குடிநீர் தேவைக்காக, 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்தாண்டு இதே நாளில், அணை நீர்மட்டம், 66 அடியாகவும், நீர் இருப்பு 9 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.