/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் நீர்மட்டம் 70 அடியை எட்டியது
/
பவானிசாகர் நீர்மட்டம் 70 அடியை எட்டியது
ADDED : மே 25, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி :நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம், 398 கன அடியாக இருந்த நீர்வரத்து, 1,342 கன அடியாக நேற்று அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் நேற்று மதியம், 70 அடியை தொட்டது. குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில், 100 கன அடி, கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு, 10.9 டி.எம்.சி.,யாக இருந்தது.