/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் நீர்மட்டம ் ஒரே நாளில் 1 அடி உயர்வு
/
பவானிசாகர் நீர்மட்டம ் ஒரே நாளில் 1 அடி உயர்வு
ADDED : நவ 04, 2024 04:56 AM
புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மலைப்பகுதியில், கடந்த சில நாட்க-ளாக மழை கொட்டுகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து, 3,468 கன அடியாக இருந்த நிலையில், 13 ஆயிரத்து, 982 கன அடியாக நேற்று அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம், 91.5௦ அடியில் இருந்து, 92.50 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்தது. நீர் இருப்பு, 23.2 டி.எம்.சி,யாக இருந்தது.
மழையால் மகிழ்ச்சிபவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த, சில நாட்-களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, பவானிசாகரில், 41.4 மி.மீ., மழை பதிவானது. தொடர் மழையால் குளம், குட்டை, தடுப்பணைகளுக்கு நீர் வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் புன்செய்பு-ளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில்,நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.