/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் நீர்மட்டம் 102 அடியில் நீடிப்பு
/
பவானிசாகர் நீர்மட்டம் 102 அடியில் நீடிப்பு
ADDED : அக் 30, 2025 02:04 AM
புன்செய் புளியம்பட்டி, ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டதாகும். அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில், மழை தீவிரமடைந்ததன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கடந்த, 21ல், 102 அடியை எட்டியது.
தொடர்ந்து பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம், 4,900 கனஅடியாக இருந்த நிலையில், நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைந்ததால், நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து, 3,029 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து உபரிநீர், 900 கன அடி; பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில், 2000 கன அடி, அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்காலில், 100 கன அடி தண்ணீர் என மொத்தம், 3,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதாவது அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடி; நீர் இருப்பு 30.3 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரும், வெளியேற்றப்படும் நீரும் ஒரே அளவும் ஒன்றாக இருப்பதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து, 9வது நாளாக, 102 அடியில் நீடிக்கிறது.

