/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி நகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
/
பவானி நகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : மே 10, 2024 07:03 AM
பவானி : பவானி நகராட்சி நிர்வாகம் சார்பில், புது பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் பந்தல் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்தியூர்-மேட்டூர் பிரிவில் ஒரு தண்ணீர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் மோகன்குமார் திறந்து வைத்தார். நகராட்சி பொறியாளர் காளீஸ்வரி, மேலாளர் உதயகுமார், துப்புரவு ஆய்வாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இங்கு நீர் மோருடன், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் களைப்பை போக்கும் தாது உப்க் கரைசலும் (ஓ.ஆர்.எஸ்., கரைசல்) வழங்கப்படுகிறது.இதேபோல் தி.மு.க., சார்பில், குருப்பநாயக்கன்பாளையம், மூன்ரோடு மற்றும் பருவாச்சியில் நீர்மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் நல்லசிவம் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, குளிர்பானம், இளநீர், பழத்துண்டு வழங்கினார். இதில் பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ், அரசு வழக்கறிஞர் விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.