ADDED : நவ 22, 2026 06:40 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டம் எலவமலை பஞ்., மாரப்பம்பாளையத்தில், பொது நிலத்தில் நடவு
செய்வதற்காக திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட, 800 பீமா
மூங்கில் நாற்று நடவு செய்யும் பணி துவங்கியது. கலெக்டர் கந்தசாமி
பணியை துவக்கி வைத்தார்.
காற்றில் கார்பன் டை ஆக்சைடு அளவை குறைத்து,
ஆக்சிஜன் அளவை அதிகரிக்க, மூங்கில் மரங்கள் உதவுகிறது. மண்ணரிப்பை
தடுக்கும். காடுகளின் பரப்பை அதிகரிப்பதிலும் முக்கிய பங்காற்றும்.
இத்திட்டத்தில் மூங்கில் நாற்றுக்கான உரிய மானியமாக, 26,600 ரூபாய்,
நடவு மானியம், 28,400 ரூபாய் பண பயனாகவும், இடுபொருள் மானியமாக,
44,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
நடவு செய்யப்பட்ட மூங்கில்
செடிகளை முறையாக பராமரிப்பதற்கு தேவையான இடுபொருட்களும்
பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக, தோட்டக்கலைத்துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
