தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தெருநாயால் ஜே.சி.பி., ஆப்பரேட்டர் சாவு

தெருநாயால் ஜே.சி.பி., ஆப்பரேட்டர் சாவு

தெருநாயால் ஜே.சி.பி., ஆப்பரேட்டர் சாவு


ADDED : நவ 22, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 06:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:கோபி அருகே தெருநாய் குறுக்கே ஓடியதால், பைக்கில் இருந்து விழுந்த ஜே.சி.பி., ஆப்பரேட்டர் இறந்தார்.

கோபி அருகே கெட்டிச்செவியூரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 41; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். கடந்த, 18ம் தேதி இரவு, 8:00 மணிக்கு டி.வி.எஸ்., பைக்கில், கொளப்பலுார் சாலையில் சென்றார். திடீரென சாலையின் குறுக்கே தெருநாய் ஓடியதால், நிலைதடுமாறி விழுந்ததில், சுப்பிரமணி பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்பிரமணி நேற்று இறந்தார். இதுகுறித்து அவரின் மனைவி பொற்கொடி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us