'காபி வித் கலெக்டர்' நிகழ்வில் மாணவர்களுக்கு அறிவுரை
'காபி வித் கலெக்டர்' நிகழ்வில் மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : நவ 22, 2026 06:39 AM
ஈரோடு:ஈரோடு
கலெக்டர் அலுவலகத்தில், 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட
அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவியருடன் நடந்தது. கலெக்டர் கந்தசாமி
தலைமை வகித்து பேசினார்.
மாணவ, மாணவியர் தினமும் புத்தகங்கள்
படிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். திருக்குறள், இந்திய
அரசியல் அமைப்பு சட்டம் குறித்து படிக்க வேண்டும். எந்த பாடத்தையும்,
புத்தகத்தையும் கருத்தை அறிந்து படிக்க வேண்டும்.
உயர் கல்வி படிக்க
விரும்புவோர், அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள், கல்வி
உதவித்தொகைகளை பெற்று பயன் பெற வேண்டும் என்றார்.
பின் கல்வி,
சமூகம், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுடன்
கலந்துரையாடினார். நிகழ்வில் சி.இ.ஓ., மான்விழி, மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலர் கோபிநாத், பயிற்சி துணை கலெக்டர் சித்தார்த், மாவட்ட கல்வி
அலுவலர் (மெட்ரிக்) கேசவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
