/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
/
பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
ADDED : மார் 10, 2024 03:36 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 6 பஞ்.,களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 2 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 63 திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடந்தது.
கொண்டம்பட்டி, அத்திப்பாடி, கீழ்குப்பம், நொச்சிப்பட்டி, பெரிய கொட்ட குளம், கதவணி ஆகிய பஞ்.,களில் 4 அங்கன்வாடி மையங்கள், 2 பொது வினியோக கடைகள், 6 கதிரடி களம், 31 சிமென்ட் சாலை பணிகள், 3 பேவர்பிளாக் சாலைபணிகள், 3 மயானங்கள், 14 தெரு விளக்குகள் என 63 திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. தி.மு.க., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமை வகித்து பணியை துவக்கி வைத்தார். பி.டி.ஓ.,க்கள் பாலாஜி, சுப்பிரமணி, ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், ரஜினி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை செயலாளர் சந்திரன்,மாவட்ட பொருளாளர் கதிரவன், நகர அவைத் தலைவர் தணிகை குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* சூளகிரி ஒன்றியம், ஆலுார் பஞ்.,ல், கனிமங்கள், குவாரிகள் நிதியில் இருந்து, 47.45 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய பஞ்., அலுவலகம் கட்டும் பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் நாகேஷ், பஞ்., தலைவர் ராதாபிர காஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், தளி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டி கிராமத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, மரியாளம் கிராமத்தில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, நாட்றாம்பாளையத்தில் இருந்து பிலிகுண்டுலு கிராமம் வரை, 27 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒகேனக்கல் சாலை பணி ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், அஞ்செட்டி - நாட்றாம்பாளையம் சாலையில் இருந்து, ஆரோக்கியபுரம் வழியாக அத்திமரத்துார் கிராமம் வரை, 1.44 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

