தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஏலச்சீட்டு மோசடி; விசாரிக்க கோரிக்கை

ஏலச்சீட்டு மோசடி; விசாரிக்க கோரிக்கை

ஏலச்சீட்டு மோசடி; விசாரிக்க கோரிக்கை


ADDED : ஜன 06, 2026 08:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 08:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, 46 புதுார் பகுதி விஜயகுமார் தலைமையிலான சிலர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், மனு வழங்கி கூறியதாவது: நாங்கள் சிறு, குறு வியாபாரிகளாக ஈரோடு கருங்கல்பாளையம், காவேரி சாலை, 46புதுார், முனிசிபல் காலனி உட்பட பல இடங்களில் உள்ளோம். கருங்கல்பாளையம் கண்ணையன் வீதியில் செயல்படும் நாடார் முன்னேற்ற சங்கத்தில், ஏலச்சீட்டில், மூன்றாண்டாக பணம் செலுத்தி வந்தோம்.

கடந்த நவ., 18 ல் சங்க கட்டடம் திறக்கப்படவில்லை. விசாரித்தால், சங்க கணக்காளர் ராஜேந்திரன், துணை கணக்காளர் செந்தில்குமார் ஆகியோர், சீட்டு பணத்துடன் ஓடிவிட்டது தெரிய வந்தது. சங்கத்தை நம்பித்தான் சீட்டு பணம் செலுத்தினோம். பல கோடி ரூபாய் மதிப்பில் பண இழப்பு நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க, கலெக்டர் வலியுறுத்த வேண்டும். எங்களது பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us