ADDED : அக் 29, 2026 01:21 AM
ஈரோடு: பீகார் மாநிலம், சாரன் மாவட்டம் குலாம் நபி மகன் அகமது அலி, 38. மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில் வசித்து வந்தார்.
காட்டுபாளையம் பரணி பிராய்லர் கம்பெனியில், சுமை தொழிலாளியாக வேலை செய்தார். இங்குள்ள குடோனில், பாரம் ஏற்ற நஞ்சை ஊத்துக்குளியில் இருந்து, மொடக்குறிச்சி சாலை வழியே சாமிநாதபுரம் சூர்யா மீன் பண்ணை அருகே, ஹோண்டா ஆர்னெட் பைக்கில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். பைக்கின் பின்னால் உறவினர் சல்மான் அமர்ந்து இருந்தார்.
அப்போது எதிரே அஜாக்கிரதையாக வந்த யமஹா எப்இசட்5 பைக், ஹோண்டா ஆர்னெட் பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அகமது அலி, சல்மானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொன்றனர். அங்கு அகமது அலியை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். யமஹா பைக்கில் வந்த நபர் குறித்து, மொடக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
