/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பீகார் மாநில கூட்டுறவு துறையினர் ஆலோசனை
/
பீகார் மாநில கூட்டுறவு துறையினர் ஆலோசனை
ADDED : ஜன 04, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஜன. 4-
ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சேவைகளை அறிய, பீகார் மாநில கூட்டுறவு மற்றும் வனத்துறை அமைச்சர் பிரேம்குமார் தலைமையில், கூட்டுறவு துறை அதிகாரிகள் பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க செயல்பாடுகளை பார்வையிட்டனர். பீகார் மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் லாலன்குமார் ஷர்மா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், ஈரோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கலிதா பானுவுடன் ஆலோசனை நடத்தினர்.
தரமான மஞ்சள் பொடி, மசாலா பொடி தயாரிப்பு குறித்து அவர் விளக்கினார். மேலும், கொப்பரையை நேரடி கொள்முதல் செய்து, அரவை செய்து, பசுமை தேங்காய் எண்ணெய்  பெயரில் விற்பனை செய்வதை பார்வையிட்டனர்.

