/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பீகார் வாலிபர்களுக்கு கத்திக்குத்து போதை வாலிபருக்கு சிறை
/
பீகார் வாலிபர்களுக்கு கத்திக்குத்து போதை வாலிபருக்கு சிறை
பீகார் வாலிபர்களுக்கு கத்திக்குத்து போதை வாலிபருக்கு சிறை
பீகார் வாலிபர்களுக்கு கத்திக்குத்து போதை வாலிபருக்கு சிறை
ADDED : செப் 04, 2025 01:55 AM
ஈரோடு, சபீகார் மாநில வாலிபர்களை, கத்தியால் குத்திய உத்தரபிரதேச மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, முத்துசாமி வீதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மூன்று வீடுகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி, கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த குடியிருப்பில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மனோஜ்குமார், 30, தங்கி பெயின்டிங் வேலைக்கு செல்கிறார். கடந்த, 31ல் மது போதையில் இருந்த மனோஜ்குமார், அந்த குடியிருப்பில் இருக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த இந்திரஜித், 20, அசோக்குமார், 18, ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்தார். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மனோஜ்குமார் கத்தியால் இருவரையும் குத்தினார். காயமடைந்தவர்கள் கூச்சலிடவே, அங்கிருந்த பொதுமக்கள் தடுக்க வந்தனர். மனோஜ்குமார் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, அங்கிருந்து மது போதையில் வீட்டின் மேற்கூரையில் ஏறி தப்பி செல்ல முயன்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். பிறகு மூவரையும் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஈரோடு டவுன் போலீசில் இந்திரஜித், அசோக்குமார் அளித்த புகார்படி, போலீசார் வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் மனோஜ்குமாரை கைது செய்து, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.