/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காளிங்கராயன் அணைக்கட்டில் குளித்த பில் கலெக்டர் பலி
/
காளிங்கராயன் அணைக்கட்டில் குளித்த பில் கலெக்டர் பலி
காளிங்கராயன் அணைக்கட்டில் குளித்த பில் கலெக்டர் பலி
காளிங்கராயன் அணைக்கட்டில் குளித்த பில் கலெக்டர் பலி
ADDED : ஜூலை 01, 2025 01:43 AM
பவானி, பவானி, காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில், நேற்று முன்தினம் அணைக்கட்டு நீரில் மூழ்கி, 3௦ வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து விட்டார். பவானி போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தெத்திகிரிபட்டியை சேர்ந்த ராகுல், 28, என்பது தெரிய வந்தது. பி.எஸ்.சி., பட்டதாரியான இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு- படைவீடு டவுன் பஞ்., அலுவலக பில் கலெக்டராக பணிபுரிந்தார். திருமணம் ஆகாதவர். விடுமுறை தினமான நேற்று முன்தினம் காளிங்கராயன் அணைக்கட்டில் குளிக்க வந்துள்ளார்.
நீச்சல் தெரியாத நிலையில் நீர்த்தேக்கத்தில் இறங்கி குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதில் சேற்றில் கால் சிக்கியதில் இறந்தது தெரிய வந்தது. உறவினர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டதாகவும், போலீசார் தெரிவித்தனர்.