/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'என் வார்டு புறக்கணிக்கப்படுது' பா.ஜ., கவுன்சிலர் ஆவேசம்
/
'என் வார்டு புறக்கணிக்கப்படுது' பா.ஜ., கவுன்சிலர் ஆவேசம்
'என் வார்டு புறக்கணிக்கப்படுது' பா.ஜ., கவுன்சிலர் ஆவேசம்
'என் வார்டு புறக்கணிக்கப்படுது' பா.ஜ., கவுன்சிலர் ஆவேசம்
ADDED : டிச 18, 2025 05:19 AM
தாராபுரம்: ''நான், பா.ஜ., கட்சியில் உள்ளதால், என் வார்டுக்கு, எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை,'' என, பா.ஜ., கவுன்சிலர் மீனாட்சி கூறினார்.
தாராபுரம் நகராட்சி அலுவலகத்தை, 28வது வார்டு கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி மற்றும் வார்டு மக்கள், நேற்று காலை முற்றுகையிட்டனர். நகராட்சி கமிஷனரிடம், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாதது குறித்து முறையிட்-டனர். பின்னர் மீனாட்சி கூறியதாவது:என் வார்டில், நன்றாக இருந்த சாக்கடையை இடித்து விட்-டனர்; கட்டித்தரவில்லை. குப்பை அள்ளுவதற்கு ஆட்கள் வருவ-தில்லை. தண்ணீர் வசதியே இல்லை. இது குறித்து, பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. நகராட்-சியில் பணம் இல்லை என கூறுகின்றனர்.
அவர்கள் கட்சித் தலைவர் பெயரில், அலங்கார வளைவு அமைக்க பணம் உள்ளது. மக்களுக்கான பணி செய்ய பணம் இல்-லையா. நான் பா.ஜ.,கட்சி என்பதால், என் வார்டை புறக்கணிக்-கின்றனர். தேவைகள் குறித்து அளிக்கும் மனுக்கள், குப்பை கூடைக்கு செல்கிறது. நகராட்சி கமிஷனர், ஒரு வார கால அவ-காசம் கேட்டுள்ளார். அதற்குள் அடிப்படை தேவைகளை நிறை-வேற்றாவிட்டால், பா.ஜ., கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்-ணாமலை முன்னிலையில், மக்களை திரட்டி, போராட்டத்தில் ஈடு-படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

