/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கருணாநிதி பெயர் சூட்ட பா.ஜ., கவுன்சிலர் எதிர்ப்பு
/
கருணாநிதி பெயர் சூட்ட பா.ஜ., கவுன்சிலர் எதிர்ப்பு
ADDED : அக் 11, 2025 12:47 AM
தாராபுரம், தாராபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்க, பா.ஜ., கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தாராபுரம் நகராட்சி, 28வது வார்டு கவுன்சிலரும், திருப்பூர் மாவட்ட பா.ஜ., துணை தலைவருமான மீனாட்சி கோவிந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த இரு தினங்களுக்கு முன், தாராபுரம் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடந்தது.
இதில் தாராபுரம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்டுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணாநிதி பெயருக்கு பதிலாக, தீரன் சின்னமலை அல்லது அம்பேத்கர் அல்லது மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் அமராவதி அன்னை பெயரை சூட்ட வேண்டும். இதை மீறி கருணாநிதி பெயரை சூட்டினால், போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தாராபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு, அம்பேத்கர் பெயர் வைக்க, வி.சி., தரப்பில் ஆர்.டி.ஓ.,விடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.