ADDED : அக் 08, 2026 04:48 AM

அ நிறம் | அளவு
கோபி:பிரதமர்
மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சேவையை போற்றும் வகையில்,
ஈரோடு பா.ஜ., வடக்கு மாவட்டம் சார்பில், ஜோதி ஏந்தி பேரணி கோபியில்
நடந்தது.
கோபி-மொடச்சூர் சாலையில் உள்ள கே.எம்.எஸ்., திருமண
மண்டபத்தில், பிரதமர் மோடி நேரலையில் பொதுமக்கள் மத்தியில்
பேசுவதை ஒளிபரப்பினர். அதன்பின், மொடச்சூர் சாலையில் இருந்து, கோபி
பஸ் ஸ்டாண்டு, சிக்னல், எம்.ஜி.ஆர்., சிலை, கச்சேரிமேடு வரை, ஜோதி
ஏந்தி பேரணி சென்றனர். ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார்
தலைமை வகித்தார். மாநில செயலாளர் மலர்க்கொடி, சிறுபான்மை அணியின் மாநில
தலைவர் ஜான்சன் ஜோசப், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செந்தில் உட்பட பலர்
பங்கேற்றனர்.
