ADDED : மார் 06, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெருந்துறை தொகுதி பா.ஜ., மகளிரணி சார்பில், இருசக்கர வாகன பேரணி, பெருந்துறையில் நேற்று மாலை நடந்தது.தெற்கு மாவட்ட மகளிரணி மாவட்ட பொருளாளர் வக்கீல் சுகன்யா விஜயராகவன் தலைமை வகித்தார்.
மகளிரணி மாநில பொது செயலாளர் மோகனப்பிரியா சரவணன், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவி புனிதம் ஐயப்பன் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட பொது செயலாளர் ராயல் சரவணன் பேரணியை துவக்கி வைத்தார்.புது பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பெருந்துறை அண்ணாதுரை சிலை அருகில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் நிறைவடைந்தது.

