/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் கார் பார்க்கிங்கில் அதிக கட்டணம் பா.ஜ.,வினர் ஜி.எம்.,மிடம் முறையீடு

ADDED : ஜூன் 18, 2025 01:10 AM
ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில், ஈரோட்டுக்கு நேற்று ஆய்வுக்கு வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லக்காபுரம், பரிசல்துறை-கொக்கராயன்பேட்டை சாலை, காரணம்பாளையம் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்ட வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் பின்புற பகுதியில் தானியங்கி ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தை அமைக்க வேண்டும்.
மழை காலங்களில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் நுழைவு பாதையில் மழை நீர் தேங்கி குளம் போல் நிற்கிறது. இதை சரி செய்ய வேண்டும். ஈரோடு ரயில்வே பிளாட்பார்ம், காத்திருப்பு அறையில் துாய்மை பணி கேள்விக்குறியாகி இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷன் கார் பார்க்கிங்கில் அதிக தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரயில்வே திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது.
ஈரோடு சென்னிமலை சாலை நுழைவு பாலம், ரங்கம்பாளையம் நுழைவு பாலம், பெருந்துறை ஆர்.எஸ். நுழைவு பாலம் உள்ளிட்டவற்றில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழை காலத்தில் மழை நீர் நுழைவு பாலத்தில் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே காலனி பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாததால், சமூக விரோதிகளின் இருப்பிடமாக மாறி வருகிறது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.