/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பா.ஜ., கெடு எதிரொலி சென்னிமலை மலைப்பாதை 13ம் தேதி திறப்பு
/
பா.ஜ., கெடு எதிரொலி சென்னிமலை மலைப்பாதை 13ம் தேதி திறப்பு
பா.ஜ., கெடு எதிரொலி சென்னிமலை மலைப்பாதை 13ம் தேதி திறப்பு
பா.ஜ., கெடு எதிரொலி சென்னிமலை மலைப்பாதை 13ம் தேதி திறப்பு
ADDED : அக் 10, 2025 01:00 AM
சென்னிமலை, -சென்னிமலை மலை மீது அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, ௪ கி.மீ., துாரத்திற்கு தார்ச்சாலை உள்ளது. சாலை சேதமடைந்ததுடன், மழை
காலங்களில் அரிப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் மண் திட்டாகியது. இதனால் மலைப்பாதை வழியாக வாகனங்களில் செல்ல முடியாமல் பக்தர்கள் சிரமப்பட்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, ரூ.6.70 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணியை, 2024 ஜூலை மாதம் காணொலி காட்சியில் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து மலைப்பாதையின் இரு ஓரங்களிலும் வடிகால் அமைத்தல், 13 சிறு பாலங்கள் கட்டும் பணி தொடங்கியது. தொடங்கியவுடன் வனத்துறையினர் சிறு செடி, மரங்களை அகற்றிதாக கூறி, பாதையை அகலப்படுத்த முட்டுக்கட்டை போட்டது. கோவில் செயல் அலுவலர் மீதும் வழக்கு பதிவு செய்தது. இதனால், 35 நாட்கள் பணி நடக்கவில்லை. இதனால் வனத்துறைக்கு அபராதம் செலுத்திய பின், வனத்துறை அனுமதி கொடுத்து பணிகள் தொடங்கிய நிலையில் மழையால் இடையூறு ஏற்பட்டது.
ஆனாலும், 14 மாத போராட்டத்துக்கு பிறகு பணிகள் முடிந்தன. பக்கவாட்டு சுவர்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியே பாக்கி இருந்தது. இதனால் விரைவில் வாகனங்களை அனுமதிக்க, பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். கோவில் நிர்வாகத்தினர் மவுனம் காத்த நிலையில், பா.ஜ.,வினர் களமிறங்கினர். 'அக்., ௧௪ம் தேதிக்குள், மலைப்பாதையை திறக்காவிட்டால், அன்றைய தினம் நாங்கள் திறப்பு விழா நடத்துவோம்' என்று அதிரடியாக அறிவித்தனர். இதனால் அரண்டு போன கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தியது. இதை தொடர்ந்து வரும், ௧௩ம் தேதி காலை, ௧௦:௦௦ மணிக்கு, காணொலி காட்சியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.