/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி ௨௬வது வார்டில் கறுப்பு நிறத்தில் வந்த குடிநீர்
/
மாநகராட்சி ௨௬வது வார்டில் கறுப்பு நிறத்தில் வந்த குடிநீர்
மாநகராட்சி ௨௬வது வார்டில் கறுப்பு நிறத்தில் வந்த குடிநீர்
மாநகராட்சி ௨௬வது வார்டில் கறுப்பு நிறத்தில் வந்த குடிநீர்
ADDED : டிச 10, 2024 01:44 AM
மாநகராட்சி ௨௬வது வார்டில்
கறுப்பு நிறத்தில் வந்த குடிநீர்
ஈரோடு, டிச. 10-
ஈரோடு மாநகராட்சி, 26வது வார்டுக்கு உட்பட்ட கருங்கல்பாளையத்தில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து அப்பகுதியில் உள்ள, ௧,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு, ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் வினியோகிக்கப்பட்ட நீர் கறுமை நிறத்தில் வந்ததால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முறையாக சுத்திகரிப்பு செய்யாததால், குடிநீர் கறுப்பு நிறத்தில் வந்துள்ளது. மக்களின் புகார் அடிப்படையில், நேற்று துாய்மையான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக, மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.