ADDED : நவ 04, 2026 07:49 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்:தமிழக
முதல்வர் விஜய் நேற்று பெருந்துறையில் நடந்த நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதற்காக கோவை விமான
நிலையத்திலிருந்து, காரில் சாலை மார்க்கமாக சென்றார்.
அப்போது
செங்கப்பள்ளியை சேர்ந்த அ.தி.மு.க. தொழில் நுட்ப அணி இணை செயலாளர் துரை
சேனாதிபதி, தன் வீட்டு மீது கருப்பு கொடி கட்டி, கருப்பு பலுான் பறக்க
விட்டு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டிருந்தார். இதையறிந்த
ஊத்துக்குளி போலீசார் நேற்று காலை, முதல்வர் வருகைக்கு முன்பே அவரை
அவரது வீட்டில் கைது செய்தனர்.
