/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கருகிய மக்காச்சோள பயிர் ஆய்வு: விதை நிறுவனத்துக்கு கண்டிப்பு
/
கருகிய மக்காச்சோள பயிர் ஆய்வு: விதை நிறுவனத்துக்கு கண்டிப்பு
கருகிய மக்காச்சோள பயிர் ஆய்வு: விதை நிறுவனத்துக்கு கண்டிப்பு
கருகிய மக்காச்சோள பயிர் ஆய்வு: விதை நிறுவனத்துக்கு கண்டிப்பு
ADDED : ஏப் 27, 2024 07:05 AM
புன்செய்புளியம்பட்டி : புன்செய் புளியம்பட்டி அருகே புங்கம்பள்ளி, அனையப்பாளையம், செல்லம் பாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர், முளைப்புத்திறன் குறைந்து கதிர் பிடிக்காமல் உதிர்ந்து விழுந்தது. குருத்தும் அழுகி காய்ந்தது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தோட்டங்களில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.இதை தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கீழ் இயங்கும், பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் சக்திவேல் தலைமையிலான விதை சான்று அதிகாரிகள், விதை ஆய்வாளர் மற்றும் பூச்சியியல் துறை அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்காச்சோள தோட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
இதுகுறித்து வேளாண் துறை அலுவலர் மற்றும் விதை நிறுவன ஊழியர்களிடம், சக்திவேல் கூறியதாவது: விதைகளை ஆய்வு செய்யும் பொழுது தரமற்றது என கண்டறியப்பட்டால், அது ஒரு டன்னாக இருந்தாலும் அனுமதிக்க கூடாது. மக்காச்சோள விதைகளை நடவு செய்த பின் முளைக்கத் துவங்கிய நாளிலிருந்து வேளாண் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். பயிர் முளைக்க துவங்கிய, 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்திருந்தால் இந்த பிரச்னையை தவிர்த்திருக்க முடியும். இவர் அவர் கூறினார். மக்காச்சோள விதை பேக்கிங் செய்யப்பட்ட கவரில் உள்ள விபரங்களில் குறிப்பிட்டபடி, தரம் திருப்திகரமாக இல்லை என, காவேரி விதை நிறுவன அலுவலர்களிடம் கண்டிப்பு தெரிவித்தார்.

