/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வி.இ.டி., கல்லூரியில் ரத்த தான முகாம்
/
வி.இ.டி., கல்லூரியில் ரத்த தான முகாம்
ADDED : பிப் 17, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை அமைப்புகள் ஈரோடு மத்திய அரிமா சங்கம் (324-ஈ), ஈரோடு மத்திய அரிமா சங்க அறக்கட்டளையுடன் இணைந்து, ரத்த தான முகாம் நடந்தது.
வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெயகுமார், கல்லுாரி முதல்வர் நல்லசாமி, நிர்வாக அலுவலர் லோகேஷ் குமார் தொடங்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு மத்திய அரிமா சங்க வட்டார தலைவர் சிவா, செயலாளர் வெங்கட கணேஷ், பொருளாளர் முகமது ஹமீது, ஈரோடு மத்திய அரிமா சங்க அறக்கட்டளை தலைவர் தேவராஜ், செயலாளர் குமரவேல், முன்னாள் சங்கத் தலைவர் ஜெயஸ்ரீ தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்,