ADDED : நவ 07, 2025 12:41 AM
ஈரோடு, ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் வைரவேல்,48; சாலையோரம் வளையல், சோப்பு, கண்ணாடி விற்கும் தொழில் செய்தார். மது பழக்கம் உள்ளவர். இவரது இரண்டாவது மனைவி சுதா, 43. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.
கணவனை பிரிந்து மகனுடன் எட்டு ஆண்டாக சுதா, பள்ளிப்பாளையத்தில் வசித்தார். கடந்த 2 இரவு, 8:00 மணிக்கு வீட்டுக்குள் சென்ற வைரவேல், மறுநாள் மதியம், 1:30 மணி வரை வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவரது வீட்டின் அருகே சென்ற போது துர்நாற்றம் வீசியுள்ளது.
ஈரோடு தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்து சென்று கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். வைரவேல் உடல் அழுகிய நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து வந்த சுதா, இறந்தது தன் கணவர் தான் என்பதை உறுதி செய்தார். ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

