/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீதிமன்ற கட்டடத்தில் இருந்து விழுந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதி
/
நீதிமன்ற கட்டடத்தில் இருந்து விழுந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதி
நீதிமன்ற கட்டடத்தில் இருந்து விழுந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதி
நீதிமன்ற கட்டடத்தில் இருந்து விழுந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதி
ADDED : நவ 07, 2025 12:41 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டம், அந்தியூர், சின்னதம்பி பாளையம், அந்தியூர் காலனியை சேர்ந்த ரங்கசாமி மகன் கார்த்தி,37; டிரைவர். இவர் மீது பவானி அனைத்து மகளிர் போலீசில் போக்சோ வழக்கு உள்ளது. அந்தியூர் போலீசில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கும் உள்ளது.
இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி கார்த்தி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளார். நேற்று வழக்கு விசாரணைக்கு ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டார்.
மதியம், 3:00 மணியளவில் வழக்கு விசாரணை முடிந்து கிளம்ப தயாராகினர். அப்போது தப்பியோடும் எண்ணத்தில் நீதிமன்ற கட்டட முதல் மாடியில் இருந்து அதாவது, 15 அடி உயரத்தில் இருந்து கீழே குதிக்க முயற்சித்தார்.
கார்த்தி நடவடிக்கையை பார்த்து உஷாரான ஆயுதப்படை போலீசார், அவரது சட்டையின் பின்புறத்தை பிடித்தனர். அதையும் மீறி முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் வலப்புற இடுப்பில் காயம்
ஏற்பட்டது.
அவரால் எழுந்து ஓட முடியாத நிலை ஏற்பட்டது. ஆயுதப்படை போலீசார், அவரை பிடித்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் மீண்டும் தப்பி செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

