/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவில்களை குறிவைத்து கொள்ளையர் கைவரிசை
/
கோவில்களை குறிவைத்து கொள்ளையர் கைவரிசை
ADDED : நவ 07, 2025 11:50 PM
புன்செய்புளியம்பட்டி: அடுத்தடுத்து இரண்டு கோவில்களில் கொள்ளை சம்பவம் நடந்ததால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே வெங்கநாயக்கன்பாளையத்தில் மதுர கருப்பராயன் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கோவில் கதவு திறந்த நிலையில் இருந்ததை நேற்று காலை கண்ட மக்கள், உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அம்மன் கருவறையில் இருந்த பீரோவை உடைத்து, 30,000 ரூபாய் திருடு போயிருந்தது.
அதேபோல், புன்செய் புளியம்பட்டி அருகே தாசம்பாளையம் வீரமாத்தி அம்மன் கோவில் பூட்டை உடைத்து, அம்மன் பட்டு சேலை, வெள்ளி பொருட்கள் திருடு போயுள்ளது.
கடந்த, 3ம் தேதி இரவு பனையம்பள்ளி, சொலவனுார் மேடு கன்னிமார் கருப்பராயன் கோவிலில், 15,000 ரூபாய், எல்.இ.டி., டிவி, வெள்ளிக்குடை திருடு போனது.
புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

