ADDED : ஆக 25, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்: தமிழ்நாடு போயர் கூட்டமைப்பு சங்கம் சார்பில், பொதுக்குழு மற்றும் ஆலோசனை கூட்டம், நம்பியூரில் நேற்று நடந்தது. மாநில தலைவர் நாகராஜ் சிறப்புரையாற்றினார். ஈரோடு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை வகித்தார்.
நம்பியூர் வட்டம் ஒழலக்கோயில் கிராமத்தில் உள்ள கல்குவாரியை குத்தகைக்கு முன்பு வழங்கியதுபோல், கோபி வட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு ஜல்லிக்கட்டு சங்கத்துக்கு வழங்க வேண்டும்.
அரசு கட்டுமான வேலைகளில் குல தொழிலாக வேலை செய்யும் போயர் காண்ட்ராக்டர்களுக்கு, 50 சதவீத வேலை தந்து உதவ வேண்டும் என்பது உள்பட, 14 தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

