ADDED : நவ 07, 2026 05:33 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர்
மாநில சங்கம் சார்பில், ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு மாவட்ட
சார்பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட
தலைவர் ஞானசம்மந்தம் தலைமை வகித்தார். பத்திரப்பதிவு துறையில், ஸ்டார்-3.0 இ-டெண்டர் விடக்கூடாது. காகிதமில்லா, நேரில் வரத்தேவையற்ற
பதிவு நடைமுறையை திரும்ப பெற வேண்டும். பத்திரம் நகல் எழுதுவோர்
வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். வரும், 10,
11ல் மாநில அளவில் பத்திரப்பதிவு பணியை முற்றிலும்
புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.
