ADDED : நவ 07, 2026 05:33 AM

ஈரோடு:ஈரோடு
ப.செ.பார்க் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான கனி மார்க்கெட்
ஜவுளி வணிக வளாகம் செயல்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,
வளாகத்தின் முன் சாலையோர தற்காலிக கடைகள் அமைக்க அனுமதி
வழங்கக்கூடாது என வணிக வளாக வியாபரிகள் கோரிக்கை விடுத்தனர். இது
தொடர்பாக மாநகராட்சி, எஸ்.பி., அலுவலகத்திலும் மனு
அளித்திருந்தனர்.
இந்நிலையில் கனி மார்க்கெட் வணிக வளாகம் முன் நேற்று போடப்பட்டிருந்த தற்காலிக ஜவுளிக்
கடைகளுக்கு
எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தை
முன்னெடுக்க தயாராகினர். இதையறிந்த டவுன் போலீசார்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக ஜவுளி கடைகளை
அகற்றுமாறு கூறினர்.
இதனால் அந்த கடைக்காரர்கள் வாக்குவாதம்
செய்தனர். உரிய அனுமதி பெற்று கடை போட்டுக்கொள்ளுங்கள். அதுவரை
வியாபாரம் செய்யக்
கூடாது எனக்கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களும் வாக்குவாதம் செய்ததால்
பரபரப்பு ஏற்பட்டது.
