ADDED : ஜூன் 10, 2026 02:50 AM
அ நிறம் | அளவு
பவானி:நாமக்கல்
மாவட்டம் குமராபாளையம், கொத்துகாரன்தோட்டத்தை சேர்ந்தவர்
மாரசாமி, 46; போர்வெல் லாரி டிரைவர். மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
மாரசாமிக்கு குடிப்பழக்கம் உள்ளதால், போதையில் குடும்பத்தினருடன்
அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.
இதனால் இரு தினங்களுக்கு முன்,
பவானி அருகே சாணார்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு
சென்றிருந்தார். அப்போது வீட்டில் விஷம் குடித்து விட்டார்.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட
நிலையில் இறந்தார். பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
